சிறப்பு ஒலிம்பிக்ஸ் சர்வதேச கால்பந்து போட்டித் தொடர் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், போட்டி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் சர்வதேச கால்பந்து போட்டி வருகிற ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் மழை வேண்டியும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘சிறப்பு குழந்தைகளின் ஒரு சிறப்பான முயற்சி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் டேனியல் மற்றும் அவரின் துணைவியார் டெனிஷா டேனியல் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் செய்திருந்தார்.
Discussion about this post