வாக்கத்தான் 2019 விழிப்புணர்வு நடையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி துவக்கி வைத்தார்.
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இரத்தசோகை இல்லாத இந்தியா, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ரோஜா பூங்காவில் இருந்து தொடங்கிய நடை பீச் ரோடு வரை நடைபெற்றது. விழிப்புணர்வு நடையில் 200 பெண் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post