தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாநகரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி, மாநகரை சுத்தமாக வைத்து கொள்வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
அவருடன் பல்வேறு சங்கத்தினர், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
Discussion about this post