உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் காந்திகிராமத்தில் புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் த.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உணவுப்பொருட்களில் கலப்படங்களை கண்டறிதல், தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை பயன்படுத்துவதால் வரும் தீமைகள், செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உட்கொள்வதால் எற்படும் தீமைகள் குறித்தும், அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தம் விளக்கப்பட்டன
Discussion about this post