அவசரகால விபத்துகளின் போது தற்காத்துக்கொள்வதற்கான பயிற்சியை செய்து காட்டி பல்வேறு இடங்களில் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் அவசர காலத்தில் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் தீ விபத்தின் போது தப்பிப்பது ஆகியவை குறித்து தீயணைப்புத் துறையினர் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்ட ஒரு கட்டிடத்திலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதையும் தீயணைப்புத் துறையினர் தத்ரூபமான செய்து காண்பித்தனர். இதில், ஆசிரியர்கள் உள்பட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த பேரிடர் கால தற்காப்பு நிகழ்ச்சியில், கலந்து கொண்டு ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெற்றனர். இதில், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் உயரமான இடத்தில் இருப்பவர்களை தனியாக ஏணி மூலம் தூக்கி வருவது குறித்து செய்து காட்டப்பட்டது. தீயணைப்புத் துறையினர் செய்து காட்டிய ஒத்திகையில் மாணவர்களையும் பங்கு பெற செய்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பாக தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கு அவசர கால வெளியேறுதல் பயிற்சி நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறையினர் பல்வேறு சாகசங்களை தத்ரூபமாக செய்து காட்டினர். இந்த ஒத்திகை நிகழ்வில் திடீரென தீ பிடித்தால் எவ்வாறு மற்ற மாணவர்களை காப்பது குறித்தும், விபத்து காலத்தில் தற்காத்து கொள்வது குறித்தும், மாணவர்களுக்கு செய்து காட்டப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
Discussion about this post