சென்னையில் என்.ஜி.ஓ அமைப்பு சார்பில் முதலுதவி சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அலெர்ட் என்னும் என்.ஜி.ஓ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. விபத்துகளின்போது முதலுதவி செய்ய வேண்டிய அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்த மாரத்தான் ஓட்டத்தை ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு, ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் லெப்டினென்ட் கர்னல் தீரஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post