திருவண்ணாமலையில் நீர் நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையினால் ஏரி, குளம், நீர் வழித்தடங்களில் யாரேனும் சிக்கிக்கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐயன் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு, நீர் வழித்தடங்களில் சிக்கிக்கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் செய்து காட்டினர். இதில் காப்பாற்றப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவிகளை அளிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் ஜல்சக்தி அபியான் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.