கோபிசெட்டிபாளையத்தில், தீயணைப்புதுறையினர் சார்பில் வெள்ள நீரில் அடித்து செல்பவர்களை காப்பற்றுவது தொடர்பான செயல் விளக்க முறை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு, பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வாய்க்கால் நீரை குளிப்பதற்காகவும், துணிகள் துவைப்பதற்காகவும், அப்பகுதி மக்கள் பயன்படுத்த வருகின்றனர். இந்த பகுதியில், சில நேரங்களில் பொதுமக்கள் குளிக்கும் போது எதிர்பராத விதமாக நீரில் முழ்கி அடித்து செல்ப்படுகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடையே நீரில் அடித்து செல்பவர்களை எவ்வாறு மீட்பது குறித்து தீயணைப்புதுறையினர் செயல் விளக்க ஒத்திகை நடைபெற்றது. இதில் நீரில் அடித்து செல்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்தும், முதலுதவி செய்வது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர். மேலும் ஆழமான பகுதியில் இறங்கி குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கினர்.
Discussion about this post