சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னை மாநகராட்சி மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தனியார் வணிக வளாகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள் உதவியுடன் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. அதன்படி சென்னை அண்ணாநகர் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் திடிரென்று புகுந்த கல்லூரி மாணவ மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடினர். இதில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், பாதகைகளை ஏந்தியபடியும், ஆள்காட்டி விரலை உயர்த்தியபடியும் நடனம் ஆடினர். வாக்களிப்பதின் அவசியத்தை வித்தியாசமான முறையில் எடுத்துரைத்த இந்த முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Discussion about this post