புதுக்கோட்டை மாவட்டத்தில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம் மூலம், 1 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பொது சுகாதாரத்துறையின் சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதனை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெறும் இந்த முகாம், மே 28ம் தேதி முதல் ஜூன் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முகாமை துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தேசிய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1.38 லட்சம் குழந்தைகள் இந்த முகாமின் மூலம் பயன்பெற உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.