மதுரையில், யாசகம் பெற்ற பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய நபருக்கு, சமூக சேவைக்கான நபருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன், மனைவியின் இறப்பிற்கு பிறகு பொதுசேவையில் ஆர்வம் கொண்டார். அதனால் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று, அந்த பணம் மூலம் பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுரையில் இருந்த அவர், அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று, 9 முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 90 ஆயிரம் ரூபாய் வழங்கினார். அவரது மனிதாபிமானத்தை பாராட்டும் விதமாக, மாவட்ட ஆட்சியர் வினய், சமூக சேவைக்கான விருதினை வழங்கி கவுரவித்தார். விருதை எதிர்பார்த்து இதனை செய்யவில்லை என விருது பெற்ற பூல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post