கேரளாவில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மத விழாக்களை ரத்து செய்ய கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் வாசு, சபரிமலை கோயிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை, கோயிலில் நடைபெறும் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுமென அவர் கூறினார். கோயிலில் அப்பம், பாயாசம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
Discussion about this post