வெங்காயம் பதுக்கலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை கோயம்பேடு சந்தையில் சோதனை நடத்தினர். வெங்காயம் சேமிப்பு கிடங்கு, வெங்காய விற்பனை கடைகளில், அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக வெங்காயம் இருப்பு உள்ளதா என்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். இருப்பு வைத்திருக்கும் வெங்காயத்திற்கு உரிய ரசீதுகளை வியாபாரிகள் காண்பிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post