நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 205 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
தமிழகத்தில் பள்ளி பேருந்துகளுக்கு பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 205 தனியார் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்டாட்சியர், போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பேருந்துகளின் தரம், பிரேக், முதலுதவிப் பெட்டி, அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி ஆகிய 19 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் 12 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.
Discussion about this post