உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். வார்னர் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி 116 ரன்களை குவித்தார். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்களைக் குவித்தது
298 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். எனினும் அணியின் கேப்டன் டேவிட் பட்லர் அதிரடியாக விளையாடி52 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்ததால், இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
Discussion about this post