ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஆரோன் ஃபின்ச் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்குள் ஓபனிங் பேட்ஸ்மேனாக தனது பயணத்தினைத் தொடர்ந்த ஆரோன் பின்ச் ஓடிஐ களில் மட்டும் 5,406 ரன்கள் அடித்திருக்கிறார். அவரது பேட்டிங் ஆவரேஜ் 38.89 ஆகும். மேக்கேல் க்ளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 2015ல் ஒருநாள் போட்டி உலககோப்பையை வெல்லும்போது அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர்களில் ஒருவர் ஃபின்ச்.
டி20களில் மொத்தமகா 3,120 ரன்கள் சேர்த்திருக்கிறார். இருபது ஓவரைப் பொறுத்தமட்டில் இவரது பேட்டிங் ஆவரேஜ் 34.28 ஆகும். மெலும் டி20யில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ரன்கள் இவர் அடித்ததுதான். ஜிம்பாப்பே அணிக்கு எதிராக ஹராரேயில் 172 ரன்கள் அடித்து உலகசாதனை செய்துள்ளார். மேலும் குறிப்பாக 2021ஆம் ஆண்டு அரபு நாட்டில் நடந்த டி20 உலககோப்பை போட்டியில் கோப்பையை வென்ற முதல் ஆஸ்திரேலியா கேப்டன் இவர்தான்.
Discussion about this post