ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலை நடத்தவில்லை என ஆங் சாங் சூகி, சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது, கடந்த 2017ஆம் ஆண்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனால் மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஆப்பிரிக்க நாடான காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விசாரணைக்கு ஆஜரான ஆங் சான் சூகி, அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர்களைத் தான் அழித்ததாகவும், இதில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் கூறினார்.
Discussion about this post