ஆறுபடைவீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 74 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடைவீடுகளில் ஒன்றான முருகன் கோயில் பிரசித்தி பெற்ற தளமாகும். ஆடி கிருத்திகை திருவிழா வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முருகப் பெருமானை தரிசிக்க ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசித்து செல்கின்றனர். தரிசிக்க வரும் பக்தர்கள் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதனை கோயில் தக்கார் மற்றும் இணை ஆணையர்கள் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் மூலம் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் 74 லட்சத்து 69 ஆயிரத்து 847 ரூபாய் பணம் மற்றும் 527 கிராம் தங்கம், 5 ஆயிரத்து 425 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post