இந்தியாவை உலகளவில் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு ஏற்ற விதத்தில் சீர்த்திருத்தங்கள் தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா – சுவீடன் தொழில் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவை உலகளவில் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு ஏற்றவிதத்தில் சீர்த்திருத்தங்களை தொடர்வதற்கு அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பட்ஜெட்டுக்கு பிறகு பல்வேறு துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, குறை அறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காப்பரேட் நிறுவனங்களின் வரி குறைப்பும், கட்டமைப்பும் சீர் திருத்தமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post