ஈரோடு ரயில் நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பட்டபகலில் கொள்ளை நிகழ்ந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஈவிஎன் சாலையில் உள்ள இந்த ஏடிஎம் அறைக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், கதவை சாத்திக் கொண்டு கையில் வைத்திருந்த ஆயுதத்தால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார். இதில் ஏடிஎம் இயந்திரத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது.
அப்போது சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் திருடனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சங்கரகுமார் என்பது தெரியவந்துள்ளது. உரிய நேரத்தில் பொதுமக்கள் திருடனை பிடித்ததால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.
Discussion about this post