கடலூர் மாவட்டம் தினசரி காய்கறி சந்தையில் நகராட்சிக்கு சொந்தமான 75 சதவீத கடைகள் வாடகை செலுத்தி விட்ட நிலையில், மீதமுள்ள கடைகள் மார்ச் மாதம் வரை கால அவகாசம் கேட்டிருந்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம், அடவாடியாக செயல்பட்டு, நகராட்சிக்கு சொந்தமான குப்பை வண்டிகளை, காய்கறி சந்தைக்கு செல்லும்
வழிகளில், குறுக்கே நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வேதனைக்குள்ளாகினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Discussion about this post