அத்திவரதர் சயன கோலத்தில் தரிசனம் அளிப்பது நாளையுடன் நிறைவடைகிறது. நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோயிலுக்கு உள்ளே வந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட்டு அவரை நின்ற கோலத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ,ஆகஸ்ட் 1-ம் தேதி வழக்கம் போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post