காஞ்சிபுரத்தில் அத்திவரதர் இன்று பச்சை பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அத்திவரதர் கடந்த 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 23 ஆம் நாளான இன்று பச்சை பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். மகிழம்பூ மாலை அணிந்து, அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். இதுவரை 30 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அத்திவரதரை தரிசிக்க உள்ளார். இதனையடுத்து கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும், நெரிசலைத் தவிர்க்கவும் மூலவர் தரிசனத்திற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த தடையை விலக்கக்கோரி பட்டாச்சாரியர்கள் மேற்கு கோபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
Discussion about this post