காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், 24வது நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டு உடுத்தி பஞ்சவர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை வழிபட்டு வருகின்றனர். 23 வது நாள் வரை 31 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அத்திவரதரை வழிபட்டனர். இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Discussion about this post