மேட்டுப்பாளைம் மொத்த ஏல மையத்தில், உருளைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்செய்யப்படும் உருளைக்கிழங்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏல மார்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு, தரம் பிரித்தபின், இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மொத்த ஏல மார்கெட்டிற்கு, தினமும் 70 முதல் 80 லோடு உருளைக்கிழங்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மூன்று முதல் நான்கு லோடு அளவிற்கு மட்டும் வருகிறது. இதனால் மூட்டை 700 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாகும் என நினைத்து வந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், அண்டை மாநிலங்களிலிருந்தும் உருளைக்கிழங்கு இறக்குமதியாவதால், உரிய விலையின்றி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Discussion about this post