திருச்சி தனியார் வங்கியில் ரூ.6 கோடி மோசடி செய்தது தொடர்பாக இரண்டு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
துவாக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று, பெல் நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறி, போலி ஆவணங்களை தயார் செய்து, தனியார் வங்கி ஒன்றில் ரூபாய் 6 கோடியே 29 லட்சம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தனியார் நிறுவனத்தின் பங்குதாரருமான மாணிக்கம், மரகதம் என்ற தம்பதியினர் மீது தனியார் வங்கி மேலாளர் பரமசிவம் புகார் அளித்தார். இதையடுத்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காக இருவர் மீதும் சிபிஐ சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Discussion about this post