தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ அராஜகத்தில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். அப்போது, குறைதீர் கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கோடு திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் மேடையில் ஏறி அடாவடியில் ஈடுபட்டார். அமைச்சர் கே.சி.வீரமணி எடுத்துக் கூறியும் அதனை கேளாமல், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, திட்டமிட்டு தொடர்ந்து வாக்கு வாதம் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். திமுக எம்.எல்.ஏவின் இந்த அநாகரிகமான செயல், கூட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்கள் உட்பட அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
Discussion about this post