உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடந்த பிரியாணி விருந்தில் ஏற்பட்ட அடிதடியில் 7 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், பிஜ்னோர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக நசிமுதீன் சித்திக் என்பவர் போட்டியிடுகிறார். தேர்தல் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ.வான மவுலானா ஜமீல் என்பவரது வீட்டில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்பு தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. விருந்தில் யார் முதலில் கலந்து கொள்வது என்பதில் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்ததோடு, 34 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post