பாடி பில்டர் என்பது சாதாரணக் காரியம் இல்லை, அதுவும் பெண்கள் அதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் சிறிய கால்களோடு எர்னிஸ் ஷெப்பர்டு என்ற 82 வயது மூதாட்டி அதைச் சாதித்திருக்கிறார்.
முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் எர்னிஸ் ஷெப்பர்டு. இவர் தன்னுடைய சிறு வயதில் ஒரு மிகப்பெரிய விபத்துக்கு உள்ளானார். அந்த விபத்தில் அவரின் கால் முட்டியில் பலமாக அடிபட்டிருந்தது. அவரின் கால் வளர்ச்சி பாதிக்கப்பட்டதால் பழைய மாதிரி உடற்பயிற்சி எதுவும் பண்ண இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த எர்னிஸ் ஷெப்பர்டு தன் வாழ்க்கையில் எதாவது சாதிக்க எண்ணினார். அதன் வெற்றியாக ஐம்பதாவது வயதில் அவருடைய சகோதரியுடன் இணைந்து ஏரோபிக் பயிற்சியை மேற்க்கொண்டார். இதன் பின் 1992ஆம் ஆண்டில் பாடி பில்டிங் பயிற்சியைத் தீவிரமாகக் கற்றுவந்தார்.பாடி பில்டிங் முயற்சிக்கு இவரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஓடிக் கொண்டே இருந்தார்.இறுதியாக இவரின் கும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
பின்னர் 71ஆவது வயதில் பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்றார். பின்னர் வயதானவர்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுப் பதக்கம் வென்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று குவித்தார்.
இவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக 2010ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர் இடம்பெற்றது. இன்றுவரை 71 வயதில் இவருக்கு இணையாக பாடி பில்டிங் போட்டியில் சாதித்தவர்கள் எவரும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.நமது இலக்கின் நோக்கம் ஒரே இடத்தில் இருந்தால் கண்டிப்பாக ஆறிலும் வெற்றி அறுபதிலும் வெற்றி என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.
Discussion about this post