எள் சாகுபடி மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பருவ காலங்களில் எள் சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த செலவில் பயிரிடப்படும் எள் மூலம், ஒரு மூட்டைக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விலை கிடைப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் மூலம் பயிர் செய்வதால் கூடுதல் மகசூல் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
Discussion about this post