விரைவில் அசுர வேட்டையாடும் தனுஷ்…

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.போஸ்டரை பார்க்கும் போதே தனுஷ் வெள்ளந்தியாக சிரிக்கும் வீரத்தனம் ஒளிந்திருக்கும் கதாபாத்திரமாக தெரிந்தது. தனுஷ்,வெற்றிமாறன் கைக்கோர்த்த வட சென்னை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கான ஆர்வம் அதிகரித்தது.

அதன் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில்,தற்போது தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் அசுர வேட்டை என ட்வீட் செய்துள்ளார்.எனவே சில நாட்களில் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.அசுர வேட்டை, வசூல் வேட்டையாடுமா என்பது ரிலீஸ்-க்கு பின்பே தெரியும்.

Exit mobile version