நாசாவை சேர்ந்த ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் என்பவர்கள் space-ல் நடந்தபடியே space station-ல் இருக்கும் பேட்டரியை கழற்றி வேறோரு பேட்டரி பொறுத்தியுள்ளனர்.
1958ம் ஆண்டு ஜூலை 28 ம் தேதி நாசா உருவாக்கப்பட்டது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் தோற்றுவிக்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் சர்வதேச ஒத்துழைப்புடன் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை செய்துள்ளது.
மேலும் நாசா பல்வேறு புதிய கண்டுபிடிப்பிப்புகளையும், தகவல்களையும் அளித்து வருகின்றது. ஒரு விண்வெளி மையம் சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் அங்கு பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்களும் தான்.
இந்நிலையில் நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்களான ஜெசிகா மீர் மற்றும் கிரிஷ்டினா கோச் space station-ல் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரியை மாற்றி புதிய lithium-ion பேட்டரியை பொறுத்தியுள்ளனர்.இந்த பணியை செய்வதற்கு 6 மணி நேரம் 58 நிமிடங்கள் செலவிட்டுள்ளனர்.மேலும் 2020 ஆம் ஆண்டில் space station-லிருந்து வெளியேறி இவர்கள் space walk செய்தது இதுவே இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post