ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சென்னை தாம்பரத்தில் இயங்கிவரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சுமார் 150 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், அவர்களின் கல்விக்கு உதவும் வகையில், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்வரி கல்வி உபகரணங்கள் வழங்கினார். ஆதரவற்ற மாணவர்களுக்கு சரியான நேரத்தில் கல்வி உபகரணங்களை வழங்கிய ஒட்டுமொத்த காவல் துறைக்கும் மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post