தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில், மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3 ஆயிரத்து 585 பேரும், பெண் வேட்பாளர்கள் 411 பேரும் களத்தில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக அரவக்குறிச்சியில், 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் – 3,998 பேர் போட்டி
ஏப்ரல் 6-ல் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 3,998 பேர் போட்டி
ஆண் வேட்பாளர்கள் 3,585 பேர்; பெண் வேட்பாளர்கள் – 411 பேர்; மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள்; அரவக்குறிச்சியில், 31 வேட்பாளர்கள் போட்டி
இதற்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்காக, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அவற்றுடன், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
Discussion about this post