ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறிவைத்து, அமெரிக்கா ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருவதால், உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தை தகர்க்க வெடிகுண்டுகளை நிரப்பி வந்து கொண்டிருந்த ஐ.எஸ்.கே. தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் கார் மீது, அமெரிக்காவின் ட்ரோன் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில், கார் வெடித்து சிதறி 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, காபூல் சலீம் கர்வான் எனும் இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை நோக்கியும், விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளைக் குறிவைத்தும் அமெரிக்கா ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இடைமறித்து தாக்கும் ஏவுகணை மூலம் அமெரிக்கா இந்த தாக்குதலை தொடுத்து வருகிறது. இதுவரை ஐந்து ராக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், ஹமீது கர்சாய் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களை மறைக்கும் அளவுக்கு புகை மேலெழும்பியது. அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தாலிபன், இது தன்னிச்சையான நடவடிக்கை என கூறியுள்ளது.
Discussion about this post