ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்றார் அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர்.

நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. அசோக் கெலாட் முதலமைச்சராகவும் சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங், இருவருக்கும் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மாயாவதி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

Exit mobile version