தான் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தவறுதான் எனவும், யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை எனவும் மாடலிங் அழகி ஆஷா வனிதா தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் புதன்கிழமை இரவு குடிபோதையில் அதிவேகமாக காரை இயக்கி, பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாடலிங் நடிகை ஆஷா வனிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு பாண்டிபஜார் காவல்நிலையத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆஷா வனிதா, தான் மது அருந்தியது உண்மைதான் எனவும், ஆனாலும் தான் சுய நினைவோடுதான் இருந்ததாகவும் கூறினார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ஆஷா வனிதா தெரிவித்தார்.
Discussion about this post