மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று, முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாகவும், 126 தொகுதிகள் கொண்ட அசாமில் மூன்று கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், அசாமில் 47 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் தலா 29 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 18 பேரும், காங்கிரஸ் சார்பில் 6 பேரும் போட்டியிடுகின்றனர்.
அசாமில் தேர்தலை சந்திக்கும் 47 தொகுதிகளில் தற்போதைய எம்எல்ஏக்கள் 28 பேர் உள்பட 269 பேர் போட்டியிடுகின்றனர். இரு மாநில தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post