தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 321 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிநபர், 50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச்செல்ல தடை இல்லை என்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய சத்யபிரதா சாகு, 702 பறக்கும் படைகளும், 702 கண்காணிப்பு குழுக்களும் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 321 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.