திரைப்பட நடிப்பில் கைப்பிடித்தது மட்டுமில்லாமல் பின்பு நிஜத்திலும் கைப்பிடித்த ஜோடிகள் பலர் உள்ளனர்.சூர்யா-ஜோதிகா,சினேகா-பிரசன்னா என்று இப்படி சொல்லி கொண்டே போலாம்.தற்போது சமீபத்தில் ஆர்யாவும்,சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.அதன் பின்னர் இருவரும் காதலிப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் சொல்லி கொண்டு இருந்தார்கள்.அது உண்மையா,பொய்யா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் இருந்தார்கள்.
தற்போது,காதலர் தினமான இன்று ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக நானும் ஆயிஷாவும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என பதிவிட்டுள்ளார்.பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் இதை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் எனவும்,வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறியுள்ளார்.மேலும் எங்களின் புதிய வாழ்க்கை தொடங்கும் நிலையில் உங்களின் அன்பும்,ஆசீர்வாதமும் என்றும் எங்களுக்கு வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.இதனுடன் ஆர்யா,சாயிஷா இருவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு படத்தினையும் பதிவிட்டுள்ளார்.இதே போல் சாயிஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Discussion about this post