டெல்லி முதலமைச்சராக வருகிற 16ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பதவியேற்க உள்ளார்.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கட்சி கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அரவிந்த கெஜ்ரிவால் 3ஆவது முறையாக முதலமைச்சராகிறார். இந்த நிலையில், வருகிற 16ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் புதிய அரசு பதவியேற்கிறது. பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Discussion about this post