அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாக இருந்து வருவதால், அவருக்கு உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து, அவருக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஹர்ஷ்வர்தன், விமானப்படை தளபதி தனோவா உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தனர்.

Exit mobile version