சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவியில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் இன்று காலை கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 29-ஆம் தேதியும், அன்று இரவு லட்சார்ச்சணையும் நடைபெறவுள்ளது. மறுநாள் சித்சபை ரகசிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும். இதில் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடியே பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வருகிற 31ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.
Discussion about this post