சிங்கப்பூரில் 2020 ஆண்டுக்குள் தெருக்கள் மற்றும் அலுவலகங்களின் துப்புரவுப் பணிகளில் ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
இதற்காக அந்நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் லயன்ஸ்பாட் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் 6 துப்புரவு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. துப்புரவுப் பணிக்காக 13 வகை ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீடுகளிலும் தெருக்களிலும் இயக்கும் வண்ணம் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் இந்த ரோபோக்கள் 4 வகையான மொழிகளில் பேசும் திறனுடையவை. 2020 ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் 300 ரோபோக்களை துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post