செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்புச்சுவை நிறைந்த குளிர்பானங்களை பருகினால், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் போன்ற பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படுவதாக, சர்வதேச ஆய்வறிக்கைகள் எச்சரித்துள்ளன. இது குறித்த விழிப்புணர்வு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
கடும் வெப்பநிலை, வருடத்தில் 7 மாதத்துக்கு மேல் சுட்டெரிக்கும் வெயில் என மக்கள் தவித்து வருகின்றனர். கடும் வெயிலால் உடலில் ஏற்படும் வெப்ப மாறுதல்களை சமாளிக்க, இளநீர், நுங்கு, பதநீர், மோர், கூழ் போன்ற இயற்கை பானங்கள் இருந்தாலும், சில்லென்று, அதிக இனிப்புடன், சுண்டி இழுக்கும் வண்ணங்களில், செயற்கை முறையில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களையே மக்கள் அதிகம் விரும்பி பருகுகிறார்கள். இதுபோன்ற ரசாயனம் கலந்த குளிர்பானங்களை பருகுவதால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக பாரிஸ் பல்கலைக்கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
செயற்கை குளிர்பானங்களில் சுக்ரலோஸ், ப்ரொப்பலின் க்ளைக்கால் போன்ற வேதிப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் கலக்கப்படுவதாகவும், தொடர்ந்து இதுபோன்ற குளிர்பானங்களை பருகுவோர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
உடல் சூட்டை சமாளிக்க இயற்கையே நமக்கு பல்வேறு பானங்களை அளித்திருந்தாலும், அதிக சுவை மிகுந்த செயற்கை பானங்களை நாம் நாடி செல்வதினால் உடலுக்கு கேடு விளைகிறது. ஆகையால் இயற்கையோடு இணைந்து வாழ்வது நம்மை நோய் அற்ற பாதைக்கு அழைத்துச்செல்லும்.
Discussion about this post