நவம்பர் 9ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் மூன்று மாதங்களுக்குள் அயோத்தியில் கோவில் கட்ட, ஒரு குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.இந்த உத்தரவை அடுத்து உலகம் முழுவதும் உள்ள இந்து அமைப்புகள், கோவில்களில் இருந்து பூஜை செய்யப்பட்டு செங்கலில் ’ஸ்ரீ ராம்’ என்று பொறிக்கப்பட்டு அயோத்திக்கு வந்த வண்ணமே உள்ளது.
தமிழகம், இலங்கை உட்பட உலகின் கடைக்கோடியில் இருப்பவர்களும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான செங்கலை அனுப்பி வருகின்றனர்.கிட்டதிட்ட 3 நாட்களில் மட்டும் 3 லட்சம் செங்கலில் ’ஸ்ரீ ராம்’ என எழுதப்பட்டு அயோத்திக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது..