கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குனர் புகார் அளித்தார். இதை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 6ம் தேதி அவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திருத்தணிகாசலத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், திருத்தணிகாசலத்தை, 18 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. மீண்டும் 18ஆம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டார்.
Discussion about this post