உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷெஹரில் 40 கோடி ரூபாய் மதிப்பில் முதல் ராணுவப்பள்ளியை ஆர்எஸ்எஸ் அமைந்து வருகிறது. ராணுவத்தில் நிலவும் காலி பணியிடங்களை நிரப்பவும், இளைஞர்கள் ராணுவத்தில் ஆர்வமுடன் பணியாற்றவும், மாணவர்களுக்கு கல்வியுடன் தேகப் பயிற்சியும் அளித்து தயார் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் படிப்பவர்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்படுவது முக்கிய நோக்கம் எனினும், அது கட்டாயம் அல்ல எனவும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி வரும் 2020 ஏப்ரல் 1 முதல் இயங்க உள்ளதாகவும், இதன் முதல் ஆண்டில் ஐந்தாம் வகுப்பில் 160 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து அதன் வகுப்புகள் 12ஆம் வகுப்பு வரையிலும் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் 1,120 மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் விடுதி வசதியும்
ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தப் பள்ளியை முன்னுதாரணமாக கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளிலும் பல ராணுவப் பள்ளிகளை ஆர்எஸ்எஸ் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post