சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை துணை ராணுவப்படையினர் 6 கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள படேடா கிராமம் அடர்ந்த வனப் பகுதியில் உள்ளது. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த படேடா கிராமத்திற்கு செல்வதற்கு போதுமான சாலை வசதிகள் இல்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் முகாமிட்டிருந்த துணை ராணுவப்படையினர் அப்பெண்ணை தூக்கிக் கொண்டு பீஜப்பூருக்கு வந்தனர். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தனர். துணை ராணுவப் படையினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post