சென்னை அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் வைத்திருந்த துப்பாக்கியில் எதிர்பாராதவிதமாக கை விரல் பட்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வியாசர்பாடியை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ் நசீர் முகமது என்பவர் துப்பாக்கியை துடைத்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கை விரல் பட்டு துப்பாக்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் பள்ளியின் மேல் சுவர் துளையிட்டு லேசாக சேதமடைந்தது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post